அமித்ஷா என்னிடம் சொன்னது இது தான் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழிசை!!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி அவர்கள் 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம்,ஆந்திரா,ஒடிசா,சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசக் கட்சி அமோக வெற்றி பெற்றது.இந்நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி கன்னாவரம் பகுதியில் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆட்சியமைப்பதற்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.இவ்விழாவில் பிரதமர் மோடி,அமித்ஷா,வெங்கய்யா நாய்டு,தமிழிசை சௌந்தரராஜன்,ரஜினி காந்த்,சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமித்ஷா விவகாரம்
பதவியேற்பு விழாவில் அமர்ந்திருந்த அமித்ஷாவிற்கு தமிழிசை வணக்கத்தை தெரிவித்தபடி சென்றார்.அப்பொழுது அமித்ஷா,தமிழிசையை அழைத்து ஏதோ வார்னிங் குடுப்பது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் இது தொடர்பாக தான் தமிழிசையை அமித்ஷா கண்டித்திருப்பார் என்று கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது.
மேலும் ஒரு பெண்ணிடம் அமித்ஷா இவ்வாறு நடந்து கொள்ள கூடாது என்று அவர் மீது கண்டனங்கள் எழுந்தது.இந்நிலையில் விழா மேடையில் அமித்ஷா பேசியது குறித்து முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராராஜன் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறார்.
அதில் “மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அமித் ஷா அறிவுரை வழங்கினார்” என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் அமித்ஷா விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் மேலிட பாஜக கொடுத்த அழுத்தத்தினால் தான் தமிழிசை இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் என்று அரசியல் புள்ளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.