துணிவு படத்தின் கிளைமாக்ஸ் இப்படி தான் இருக்கும்! வெளிவந்த சூப்பர் அப்டேட்!
தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் நீங்க இடம் பிடித்தவர் நடிகர் அஜித்.இவர் பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.இவர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் துணிவு.இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.மேலும் இந்த படத்தின் மூலமாக இயக்குனர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
மேலும் இந்த துணிவு திரைப்படமானது வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் தான் வெளியானது.மேலும் ஜனவரி நான்காம் தேதி விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு திரைப்படம் டிரெய்லர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துணிவு படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் துணிவு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து இந்த படத்தின் நடிகர் சமுத்திரக்கனி பேட்டியில் கூறுகையில் துணிவு படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் தெறிக்க போகுது என கூறினார்.