Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதற்கு தான் ஆசைபட்டையா பாலகுமரா!! ரூ.3.50 கோடி மோசடி செய்த  கூட்டுறவு வங்கி மேலாளர் சஸ்பெண்ட்!..

This is what you want Balakumar!! Rs.3.50 Crore Fraud Cooperative Bank Manager Suspended!..

This is what you want Balakumar!! Rs.3.50 Crore Fraud Cooperative Bank Manager Suspended!..

இதற்கு தான் ஆசைபட்டையா பாலகுமரா!! ரூ.3.50 கோடி மோசடி செய்த  கூட்டுறவு வங்கி மேலாளர் சஸ்பெண்ட்!..

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பயிர் கடனின் 3.50 கோடி மதிப்பில் முறைகேடு ஏற்பட்டுள்ளது .இதை ஆறு மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்க செயலாளர் மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பின்னர் முறைகேடு நிதியில் 1.50 கோடி ரூபாயை மோகன் சங்கத்துக்கு செலுத்த பாதி பணத்தை கொடுத்த   மோகன் மீதி பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த முறைகேடுக்கு மத்திய கூட்டுறவு வங்கியை  சேர்ந்த ஆய்வாளர் வெங்கடேஷ் இவருடைய வயது 40 இவர் மோகனுக்கு உடந்தையாக இருந்ததாக தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து முறைகேடு நிதியில் பாதியை அவரிடம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையெடுத்து வெங்கடேசிடம் நடத்திய விசாரணையில் அவர் சரிவர பதிலளிக்கவில்லை. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மஎதிர்மறையான  பதிலை மாற்றி கூறினார்.

இதையெடுத்து வெங்கடேஷை சஸ்பெண்ட் செய்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவுள்ளது.

Exit mobile version