நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து 15 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் என்று ஜெயம் ரவி ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அது தவறு என்று கூறும் விதமாக பல வதந்திகள் வெளியாகின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ஜெயம் ரவியை முன்வந்து தானும் தன் மனைவியும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இதனை அடுத்து ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி அவர்கள் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் இந்த முடிவானது ஜெயம் ரவியின் தனிப்பட்ட முடிவு என்றும் தெரிவித்தார்.
பிரிவதற்கான காரணமாக ஜெயம் ரவி குறிப்பிட்டு இருப்பது, தன்னுடைய மனைவி மற்றும் மாமியார் இருவரும் தனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுப்பதாகவும் தனக்கென ஒரு தனி வங்கி கணக்கு கூட இல்லை என்றும் தான் செலவு செய்யக்கூடிய பத்து ரூபாய்க்கு கூட ஆர்த்தி இடம் தான் நிற்க வேண்டிய நிலை இருந்தது எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த செய்தியானது ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய வருத்தத்தை உருவாக்கியதுடன் ஆர்த்தி மீது மிகுந்த கோபம் உண்டாக காரணமாக அமைந்தது. இந்நிலையில் தான் நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் திரையிடப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுக்காமல் போனது குறிப்பிடதக்கது.
இவ்வாறான சூழ்நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தனியார் youtube சேனல் ஒன்று இருக்கு அளித்துள்ள பேட்டி டிரெண்டாகி வருகிறது. இந்த பேட்டியில் நடிகர் ஜெயம் ரவியை பேசியிருப்பதாவது :-
எனது பிரிவை பற்றி வெளியில் சொல்லியிருக்க தேவையில்லைதான். ஆனால் அதுபற்றி வதந்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன. எனக்கு என்னதான் ஆச்சு என்று பேசிக்கொண்டும் இருந்தார்கள். என்னுடைய படங்களும் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. எனவே இந்த மாதிரி வதந்தி பரவக்கூடாது என்பதற்காகத்தான் நானே அதனை வெளியில் சொல்லிவிட்டேன். என்னுடைய பட ப்ரோமோஷனில் என் தனிப்பட்ட விஷயத்தை சொல்லக்கூடாது என்று நினைத்ததால்தான் அதற்கு முன்பாகவே சொல்லிவிட்டேன் என தெரிவித்திருக்கிறார்.