Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும்! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

This item is included with the Pongal gift set! The new update released by the government!

This item is included with the Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும்! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

நேற்று சென்னையில் தேசிய பால் தின விழா மற்றும் விற்பனை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசினார்.அப்போது தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது.அப்போது ரூ 116 கோடி அளவில் விற்பனையாகியுள்ளது.

அதுபோலவே தற்போது வரவுள்ள கிருஸ்துமஸ்,ஆங்கில புத்தாண்டு ,பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.அந்த வகையில் கடந்த ஆண்டு 21 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு  வழங்கப்பட்டது.

ஆனால் அந்த பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.அதனால் இந்த ஆண்டு ரூ 1000 ரொக்கமும் ,ஒரு சில மளிகை பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த மளிகை பொருட்களுடன் ஆவின் 100 மில்லி லிட்டர் நெய் பாட்டில்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆவின் நெய்யும் விலையில்லாமல் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version