பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு பண்டிகையும் மக்கள் அதிகளவு கொண்டாடவில்லை.மிக எளிமையான முறையில் தான் கொண்டாடி மகிழ்ந்தனர்.தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்கள்.
மேலும் வரும் ஜனவரி மாதம் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.பொங்கல் பண்டிகை என்றாலே எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
அவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது.இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு என்றாலே கரும்பு இடம்பெற்றிருக்கும் ஆனால் நடப்பாண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பிற்கு கரும்பு பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.பொங்கல் பரிசு தொகை வழங்குவதை 2 ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.