Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோயாளிகளுக்கு காவலன் இந்த இலை!! மாத்திரையை ஸ்டாப் பண்ணிட்டு இனி இதை ட்ரை பண்ணுங்க!!

தற்பொழுது ஆங்கில மருந்திற்கு மாற்றாக மக்கள் நம் பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்ற தொடங்கிவிட்டனர்.கொடிய நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பாரம்பரிய வைத்தியத்தில் இருக்கிறது.

தற்பொழுது புது புது நோய் பாதிப்புகள் நம்மை அச்சுறுத்தி வரும் நிலையில் நம் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் சாதாரண காய்ச்சல் கூட நம்மை பாடாய் படுத்தி எடுத்துவிடும்.அப்படி இருக்கையில் கொடிய உயிர்கொல்லி நோயான சர்க்கரை வந்தால் நம் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.

சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடுவோம்.

சர்க்கரை பாதிப்பிற்கான காரணங்கள்:

1)இனிப்பு உணவுகள்
2)உடல் பருமன்
3)பரம்பரைத் தன்மை
4)மோசமான உணவுப் பழக்கம்
5)வயது முதுமை

சர்க்கரை நோயை குணப்படுத்தும் அதிசய இலை:

பிரியாணி சமைக்க பயன்படுத்தும் முக்கிய மசாலா பொருளான பிரிஞ்சி இலை சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.

பிரிஞ்சி இலையில் கால்சியம்,மெக்னீசியம்,இரும்பு,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பிரிஞ்சி இலையை உணவில் சேர்த்துக் கொள்வதைவிட தினமும் தேநீர் வடிவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

பிரிஞ்சி தேநீர் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

*பிரிஞ்சி இலை
*தண்ணீர்

தயாரிக்கும் முறை:

ஒரு பிரஸ் பிரிஞ்சி இலையை பறித்து இரண்டாக நறுக்கி பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

பிரிஞ்சி தேநீர் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.செரிமானப் பிரச்சனை,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவற்றால் அவதியடைந்து வருபவர்கள் பிரிஞ்சி இலை தேநீர் செய்து பருகி வரலாம்.

Exit mobile version