ஊட்டச்சத்துக்கள் இல்லாத தரமற்ற உணவுகளை உட்கொள்வதால் உடல் நலக் கோளாறு எளிதில் ஏற்படுகிறது.மைதா உணவுகள்,கொழுப்பு மற்றும் எண்ணையில் பொரித்த வறுத்த காரமான உணவுகள் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை எளிதில் உண்டாக்கிவிடுகிறது.இதனால் மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு,மூலம்,வயிற்றுப்போக்கு,எண்ணெய் உணவுகளால் சருமத்தில் பருக்கள் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
இந்த பாதிப்புகள் அனைத்தையும் துத்தி இலை கொண்டு சரி செய்துவிட முடியும்.இது கிராமப்புறங்களில் வேலி ஓரங்களில் செழிப்பாக வளர்கின்ற ஒரு மூலிகை செடியாகும்.இந்த துத்தி இலையை பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் அதாவது பைல்ஸ் பாதிப்பு குணமாகும்.
துத்தி வேரை சுத்தம் செய்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவிட்டு முகப் பருக்கள் மீது அப்ளை செய்து வந்தால் அவை விரைவில் மறைந்துவிடும்.துத்தி இலையை அரைத்து சாறு எடுத்து காய்ச்சிய பசும் பாலில் கலந்து குடித்து வந்தால் நீர்த்த விந்து,ஆண்மை குறைபாடு போன்ற பாதிப்புகள் குணமாகும்.
துத்தி இலையை பொடியாக்கி ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உள் மூலம்,வெளி மூலம்,இரத்த மூலம்,மலச்சிக்கல் குணமாகும்.கருமேகம்,படர்தாமரை,தேமல்,வெண் திட்டுக்கள் போன்ற பாதிப்புகள் குணமாக துத்தி இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி குளிக்கலாம்.
துத்தி இலையை அரைத்து சாறு எடுத்து நெயில் வதக்கி சாப்பிட்டால் செரிமானக் கோளாறு,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் குணமாகும்.துத்தி இலையை ஒரு கப் நீரில் போட்டு சூடாக்கி வாய் கொப்பளத்து வந்தால் பல் ஈறு தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.வாரத்திற்கு இருமுறை துத்திகீரை சாறை பருகி வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.