கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு!

0
113
#image_title

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு!

தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார்.

முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, வெற்றி, சட்டம் ஒரு இருட்டறை, எங்கள் அண்ணா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட மொழிகளில் நடித்துள்ளார். 1984ல் தமிழில் ஒரே ஆண்டில் 18 படங்களை வெளியிட்ட நடிகர் என்ற வரலாற்றை படைத்தார். தமிழ் சினிமாவிலிருந்து ஒதுங்கி தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சிக்குத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

ஒரு சேனலுக்கு எழுத்தாளர் அன்பராமி பேட்டி கொடுத்தார். அப்போது அவர் விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களாக எங்களுக்கு கஷ்டப்பட்ட காலத்தில் எங்கள் வயிற்று பசியை போக்கியது விஜயகாந்த் தான். கோயம்பேட்டில் இருந்த மண்டபத்தில் மதிய உணவு கொடுப்பார்கள். பிரசாதம் கூட கொடுப்பார்கள். அந்த மண்டபத்தில் பசி அடங்கும் வரை முகம் சுளிக்காமல் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

அந்த சமயத்தில் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, இனி தமிழகம் சரியான ஆளு வந்திருக்கிறார் என்று நினைத்தோம். ஏனென்றால், ஆளுங்கட்சியை எதிர்க்கும் தைரியம் அவரிடம் மட்டும்தான் இருந்தது. ஆனால், தேவையில்லாமல் அவரை சமூகவலைத்தளம் அவரை மானப்படுத்தி ட்ரோல் செய்தார்கள். அவர் பேசுவதை கேலி செய்தார்கள். இதற்கு காரணம் மீடியாக்கள் மட்டும்தான்.

அவர், ஆளுங்கட்சியை எதிர்ந்து நின்றபோது துணையாக யாரும் கிடையாது. விஜயகாந்த் போலித்தனம் இல்லாதவர். அவர் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர். அவருடைய புரட்சி படங்களைப் பார்த்து மற்ற நடிகர்களும் அவரைப் போலவே நடித்தனர்.

தன் படங்கள் மூலம் பல தலைமுறையை ஈர்த்தவர். அவருக்கு முன்னால் நம் சமூகம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றார்.