கருமையான சருமம் கலராக மாற இதை அவசியம் செய்ய வேண்டும்!! விரைவில் பலன் கிடைக்கும்!!
நம் அனைவருக்கும் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பின்விளைவுகளை சந்திப்பதை விட இயற்கையாக விளையும் பழங்களை உண்டு சரும அழகை மேம்படுத்தி கொள்ளலாம். இதனால் நம் உடலும் ஆரோக்யமாக இருக்கும். நமது சருமமும் அழகாகவும், பொலிவாகவும் இருக்கும்.
அந்த வகையில் ஆப்பிள், மாதுளை, பப்பாளி உள்ளிட்ட பழங்களை தினசரி உண்டு வந்தோம் என்றால் உடலில் பல அற்புத நன்மைகள் நிகழும். இரசாயனம் கலந்த பொருட்களை உபயோகித்து சருமத்தின் நிறத்தை மாற்ற முயற்சிப்பதை விட இயற்கையாக கிடைக்க கூடிய இந்த பழங்களை உண்டு பலனைப் பெறலாம்.
ஆப்பிள்:-
இந்த பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ சத்துக்கள் அடங்கி இருப்பதால் இதனை தொடர்ந்து உண்டு வருவதன் மூலம் இழந்த இளமைப் பொலிவை மீட்டு விட முடியும். நம் சருமத்தின் நிறத்தை சிறந்த முறையில் முன்னேற்றுவதில் இந்த ஆப்பிள் பழம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
தினமும் ஆப்பிள் பழத்தை உண்டு வந்தோம் என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாக இருக்கும். இந்த ஆப்பிள் பழத்தின் தோல் மற்றும் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது நம் சருமத்தை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
மாதுளை:-
மாதுளையில்அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தினமும் மாதுளையை சாப்பிட்டு வந்தோம் என்றால் சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும்.
மாதுளையின் தோலை நீக்கி அதில் உள்ள விதைகளை மசித்து முகத்தில் தடவுவதால் முகத்தில் படிந்துள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்த முடியும். இந்த பழத்தின் சாறு இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலின் நிறத்தை மாற்ற பெரிதும் உதவுகிறது.
பப்பாளி:-
நமது சரும ஆரோக்கியத்திற்கு பப்பாளி சிறந்த பழமாக இருக்கும். நம்மில் பலர் இந்த பழத்தை பேஸ் பேக்காக பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இந்த பழம் நம் முகத்தைப் பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. சருமத்தின் கலரை மேம்படுத்துவதோடு முகச் சுருக்கங்களைப் போக்கி இளமையாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அடிக்கடி முகத்திற்கு பப்பாளியை பேஸ்பேக்காக பயன்படுத்தும் போது முகம் நிறம் மாறுவதோடு இளமையாகவும், மென்மையாகவும் சருமம் இருப்பதை போல் உணர முடியும்.