இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!!
இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.யாரும் உணவின் மீது அக்கறை செலுத்துவதில்லை.ருசி இருந்தால் போதும் என்று உண்பதினால் தான் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உணவு ஒரு மருந்து ஆகும்.அதில் சத்துக்கள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இயங்கும்.ஆனால் எந்த ஒரு சத்தும் இல்லாத பொருட்களை தான் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.
உணவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைந்தால் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படும்.மலத்தை உரிய நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைத்தால் உடல் இயக்கமே முழுமையாக மாறிவிடும்.விரைவில் உடல் ஆரோக்கியம் கெட்டு அவை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.அதேபோல் அதிகப்படியான மன அழுத்தம்,கவலை இருந்தாலும் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படும்.இந்த மலச்சிக்கல் பாதிப்பை மருந்து மாத்திரை இன்றி முழுமையாக குணமாக்க விளக்கெண்ணெய் பயன்படுத்துவது நல்லது.
விளக்கெண்ணெய் சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.இதை ஒரு கிளாஸ் வெந்நீரில் 1/4 தேக்கரண்டி அளவு சேர்த்து குடிக்கலாம்.அதேபோல் சூடான பாலில் சிறு துளி விளக்கெண்ணெய் சேர்த்து குடிக்கலாம்.
காலையில் எழுந்ததும் இதை செய்து குடிக்க வேண்டும்.அப்பொழுது தான் மலச்சிக்கலுக்கு உரிய தீர்வு கிடைக்கும்.பால் அல்லது வெந்நீரில் விளக்கெண்ணெய் சேர்த்து குடித்த அடுத்த 1 மணி நேரத்திற்கு வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது.மலம் முழுமையாக வெளியேறிய பின்னர் மோர் அல்லது இளநீர் குடிக்கவும்.பிறகு அதிக காரம் இல்லாத உணவை சாப்பிடவும்.இவ்வாறு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மலச்சிக்கலுக்கு உரிய தீர்வு காணலாம்.