ஒரே இரவில் சளி குணமாக இந்த ஒரு டிரிங் போதும்!!
பருவநிலை மாறும் பொழுது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் சளி காய்ச்சல் இருமல் என அடுத்தடுத்த பல பிரச்சனைகள் இருந்த வண்ணமாகவே உள்ளது.
அவ்வாறு இருப்பவர்கள் அதிக அளவு மருந்து மாத்திரை சிரப் இன்று பின்தொடர ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பானம் தயாரித்து அதை குடித்து வர எப்பேர்ப்பட்ட சளி இருமலும் முற்றிலும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
கொய்யா இலை
இஞ்சி
மிளகு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று கொய்யா இலைகளின் நடுவில் உள்ள தண்டை எடுத்துவிட்டு இலையை மட்டும் தனியாக பிரித்து அந்த தண்ணீருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இச்சமயத்தில் ஒரு துண்டு இஞ்சி எடுத்து அதில் மூன்றில் இருந்து நான்கு குறுமிளகு சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
எடுத்து வைத்துள்ள இஞ்சி குரு மிளகாய் நன்றாக கொதிக்கும் தண்ணீரில் சேர்க்க வேண்டும்.
பின்பு இதனை வடிகட்டி சுவைக்காக ஒரு ஸ்பூன் பணகற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்து குடித்து வர எப்பேர்ப்பட்ட சளி இருமலும் முற்றிலும் குணமாகும்.