Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது ஒன்று மட்டும் போதும்!! நாவல் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள்!! 

இது ஒன்று மட்டும் போதும்!! நாவல் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள்!!

நாவல் பழம் விதைகள், மரப்பட்டைகள் மற்றும் இலைகள் இவைகளில் அதிக மருத்துவர் குணம் இருக்கிறது. இவைகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து போன்ற தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக நாவல் பழம் மட்டுமின்றி விதைகள், மரப்பட்டைகள், இலைகள் அனைத்திலும் மருத்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம் அதிகமாக உள்ளது. இதனை தினமும் உண்பதால் எலும்பு வலுவடையும். மேலும் நாவல் பழத்தில் விட்டமின் பி1, பி6 போன்றவைகள் உள்ளதால் ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது. மேலும் இது தோளில் உள்ள சுருக்கத்தையும் குறைக்கிறது.  இதனால் வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்துகிறது. நாவல் பழம் துவர்ப்பு சுவையை உடையது. மேலும் அதிக மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது.

பொதுவாக நாவல் பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி போட்டு விடுவார்கள். ஆனால் அந்த விதைகளில் பழத்தை விட அதிக மருத்துவ குணம் நிறைந்துள்ளது.

நாவல் பழத்தின் விதைகளை சேர்த்து வைத்து வெயிலில்  நன்றாக காய்ந்த வைத்த பின்னர் அதனை அரைத்து பவுடர் போன்று  எடுத்து வைத்துக் கொள்ளவும்.  பிறகு அதனை  வெந்நீருடன் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு தினமும் காலையில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமடையும்.  பல வெளிநாடுகளில் இருப்பவர்கள் நாவல் பழத்தின் விதைகளை பொடியாக்கி இது போன்ற குடிப்பதால்  சர்க்கரை நோய் குணமாகிறது என்று கூறுகிறார்கள். மேலும் நாவல் பழத்தின் விதையில் இருக்கும் சத்துக்களால் கல்லீரல் பிரச்சனை விரைவில் குணமடையும். மேலும் அந்த பொடியை தண்ணீரில் சேர்த்து குடித்து வருவதால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருப்பவர்களுக்கு விரைவில் குணமடையும்.

நாவல் பழம் சிறுநீரகத்தை  அதிகப்படுத்தும். ஆனால் நாவல் பல விதைகள் சிறுநீர் பிரச்சனையை நிறுத்தும். மேலும் அந்த விதையின் பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் முகப்பரு நீங்கும் சருமம் பொலிவு அதிகரிக்கும். நாவல் பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.

1. தோல் சுருக்கத்தை தடுக்கிறது இதில் கால்சியம் இருப்பதால் எலும்பு வலுவடைய பயன்படுகிறது

2. விட்டமின் நிறைந்துள்ளதால்  உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து அதிகம் கிடைக்கிறது

3. வயிற்றுப் புண்களை குணமடைய செய்கிறது.

4. பசியை தூண்டக்கூடியது. அரிப்பு நோய் போன்றவையை குணப்படுத்தும் தன்மை நாவல் பழத்திற்கு உண்டு.

இதுபோன்ற பல நன்மைகள் நாவப்பழத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படுகிறது. எனவே தினமும் நாவல் பழத்தை உண்பதால்  பல்வேறு பிரச்சனைகள் குணமடைகிறது.

Exit mobile version