Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும் ஆண்மை அதிகரிக்க!!

வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும் ஆண்மை அதிகரிக்க!!

இந்த காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கத்தினாலும் பல்வேறு காரணங்களினால் பல ஆண்களுக்கு ஆண்மை குறைவு காணப்படுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் மருத்துவர்கள் நாடுவதற்கே அஞ்சுவர். அவ்வாறு இருப்பவர்கள் இதனை தினம்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டால் போதும். அது வேறொன்றுமில்லை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் வேர்க்கடலை தான். வேர்க்கடலையில் புரதச்சத்து பொட்டாசியம் போன்றவை அதிகமாக உள்ளது. குறிப்பாக ஆண்மை அதிகரிக்கும் மெக்னீசியமும் அதில் உள்ளது. இந்த வேர்க்கடலை ஆண்மை அதிகரிக்க மட்டும் இன்றி வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் மற்றும் புற்றுநோய்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது. இரவு நேரத்தில் சிறிதளவு பச்சை வேர்க்கடலையை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அந்த ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட்டு வருவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். ஆண்மையை அதிகரிக்க பலர் இங்கிலீஷ் மருந்து மற்றும் நாட்டு மருந்து எடுத்து வருவர். அவ்வாறு இருப்பவர்கள் சிறிதளவு உணவில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் நல்ல பலனை காண முடியும். ஆண்மை குறைவு உள்ளவர்கள் வேர்க்கடலையின் தோலை நீக்கிவிட்டு அதனை பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அரைத்து வைத்த பொடியை பால் காய்ச்சும் போது அதில் இரண்டு ஸ்பூன் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு தினந்தோறும் குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இந்த வேர்க்கடலை ஞாபக சக்தி அதிகரிக்கும் ஒரு பொருளாகவும் பயன்படுகிறது. குறிப்பாக இந்த வேர்க்கடலையை முளைகட்டி சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சீராக இயங்கும். இந்த நரம்புகள் தூண்டி மூளையானது சுறுசுறுப்பாக இருக்கும்.

Exit mobile version