இன்று பலரது வீட்டில் பிரிட்ஜ் பயன்பாடு அதிகரித்துவிட்டது.காய்கறிகளை சேமிக்கவும்,உணவுகளை பதப்படுத்தவும் பிரிட்ஜ் பயன்படுகிறது.பிரிட்ஜில் பொருட்களை குவித்து வைக்கும் நாம் அதை முறையாக பராமரிப்பதில்லை.இதனால் அவை சீக்கிரம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிடுகிறது.
பிரிட்ஜை நாம் முறையாக பராமரிக்கா விட்டால் அவை விபத்துகளை ஏற்படுத்திவிடும்.குறிப்பாக பிரிட்ஜ் ப்ரீசரில் ஐஸ் கட்டிகள் அதிகளவு பதிந்திருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.
ப்ரீசரில் ஐஸ்கட்டிகள் அதிகளவு படிந்தால் அவை பிரிட்ஜின் வாழ்நாளை குறைத்துவிடும்.மலைபோல் குவிந்து கிடக்கும் ஐஸ்கட்டிகளை அகற்ற நினைப்பவர்கள் இங்கு தரப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றி பலனடையுங்கள்.
முதலில் ப்ரீசரை ஆப் செய்து விட வேண்டும்.பிறகு ஒரு காட்டன் துணியில் சிறிது தூள் உப்பு கொட்டி ப்ரீசரை துடைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிது கல் உப்பு கொட்டி ப்ரீசரில் வைக்கவும்.இவ்வாறு செய்தால் ப்ரீசரில் உள்ள ஐஸ்கட்டிகள் அனைத்தும் அனைத்தும் உருகி வந்துவிடும்.இந்த முறையில் ஐஸ்கட்டிகளை எளிதில் அகற்றலாம்.
சிலர் ப்ரீசரில் உள்ள ஐஸ்கட்டிகளை அகற்ற கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்துவர்.இதனால் பிரிட்ஜின் ஆயுட்காலம் சீக்கிரம் குறைந்துவிடும்.எனவே பாதுகாப்பான முறையில் ப்ரீசரில் உள்ள ஐஸ்கட்டிகளை அகற்ற முயலுங்கள்.