Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை உடனே அழைத்து வரும்!

#image_title

இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை உடனே அழைத்து வரும்!

நம் அனைவரையும் காக்கும் கடவுள் குலதெய்வம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே வாழ்வில் நிம்மதி, முன்னேற்றம் ஏற்படும்.

இவ்வாறு இருக்கையில் நம் குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க நிரந்தரமாக தங்க வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்யவும்.

இந்த பரிகாரம் செய்ய எலுமிச்சை, ஒரு ரூபாய் நாணயம், வெள்ளை காட்டன் துணி தேவைப்படும்.

முதலில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்தவும். அதன் பின்னர் பூஜை அறையில் உள்ள குலதெய்வத்தை மலர்களால் அலங்காரம் செய்யவும்.

பிறகு ஒரு வெள்ளை காட்டன் துணியில் ஒரு எலுமிச்சம் பழம் மற்றும் மூன்று ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும்.

அதன் பின்னர் ஒரு பச்சை நிற நூல் கொண்டு எலுமிச்சம் பழம் மற்றும் நாணயம் உள்ள துணியை ஒரு மூட்டை போல் கட்டவும்.

இந்த மூட்டையை கட்டும் பொழுது தங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 54 முறை மனதார உச்சரிக்கவும்.

பிறகு இந்த மூட்டையை வீட்டு பூஜை அறையில் ஒரு இடத்தில் வைத்து விடவும். மாதம் ஒருமுறை இந்த மூட்டையை மாற்ற வேண்டும்.

மூட்டையில் உள்ள எலுமிச்சம் பழத்தை பாதம் படாத இடத்தில் போட்டு விடவும். மேலும் மூன்று ஒரு ரூபாய் நாணயங்களை பூஜை அறையில் பத்திரமாக எடுத்து வைக்கவும்.

பிறகு மீண்டும் அதேபோல் ஒரு மூட்டை கட்டி பூஜை அறையில் வைக்கவும். நாணயங்களை மட்டும் குலதெய்வ கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தி வரவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் நிரந்தரமாக தங்கும்.

Exit mobile version