ராஜ மருந்து எது தெரியுமா?ஒரே மருந்தில் வியாதிகளிலிருந்து காக்கும்!

0
747
#image_title

 

ஒரே மருந்தில், நீங்கள் கேட்கும் அனைத்தையும் பெற முடியும்!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் மனிதர்களின் நல்வாழ்வுக்கு வழங்கிய அரும்பெரும் மருந்து, மூப்பு வியாதிகள் அணுகாமல், உடல் வளத்தை காத்து சீராக்கும், இராஜ மருந்து! உடலை வியாதிகளில் இருந்து காத்து, வலுவாக்கும் தன்மை மிக்க, காய கற்ப மருந்துகளில், உயர்வாக கூறப்படுவது! அதுவே, திரிபலா எனும் முக்கூட்டு மருந்து!

 

திரிபலா!

“மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது” என்பார்கள், பெயர் சிறிதாக இருந்தாலும், திரிபலாவின் பலன்கள் சொல்லில் அடங்காதது!

சித்த வைத்திய முறைகளில், அனைத்து மருந்துகளிலும் முதன்மையானதும், எல்லா மருந்துகளிலும் சேர்க்கப்படும் பெருமை மிக்கதும் திரிபலாவே!

“கடுக்காய் இருந்தால், பகைவன் வீட்டிலும் தைரியமாக உணவருந்தலாம்” எனும் சொல்லுக்கு ஆதாரமான சித்தர்களின் காய கற்ப மூலிகை கடுக்காய், இவை மூன்றும் சேர்ந்து உண்டான அற்புத கலவையே, திரிபலா எனும் கூட்டு மருந்தாகும்.

 

உடல் பருமனை குறைக்கும் :

உடல் கொழுப்பை உண்டாக்கும் செல்களை அழித்து, உடல் பருமனைக் குறைத்து, உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது, திரிபலா.சுவாச பாதிப்புகளை சரியாக்கி, இரத்த நாள அடைப்புகளைப் போக்கி, இரத்தத்தை சுத்தம் செய்து, சரும பாதிப்புகளை நீக்கும், சைனஸ் கோளாறுகளை சரி செய்து, உடலில் சளித் தொல்லைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது.

 

 

சீரண கோளாறுகள் :

செரிமான பாதிப்புகள், குடல் இயக்கத்தை சீராக்கி, இரத்த கொழுப்புகளை கரைக்கும் கல்லீரல் சுரப்பை அதிகரிக்கும்.

 

வயிற்றுப் பூச்சிகளை விரட்டும் :

வயிற்றின் விஷ பாதிப்புகளை நீக்கி, மலச்சிக்கல் கோளாறுகளை போக்கும் சிறந்த மலமிளக்கியாக செயலாற்றும், வயிற்றில் உண்டாகும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை வெளியேற்றி, மீண்டும் அந்த பாதிப்புகள் வயிற்றில் ஏற்படாதவாறு, குடலில் நச்சு தடுப்பு அமைப்பை உண்டாக்கி, உடல் நலம் காக்கிறது, திரிபலா.

 

ரத்த சோகையை குணப்படுத்தும் :

ஹீமோ குளோபின் எனும் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து, இரத்த சோகை பாதிப்புகளை களையும் ஆற்றல் மிக்கது, கணைய இயக்கத்தை சரியாக்கி, இன்சுலின் சுரப்பு மூலம், உடலில் சர்க்கரை சம நிலையை உண்டாக்கி, சர்க்கரை பாதிப்புகளை நீக்கக் கூடியது, திரிபலா.

 

வயிற்றுப் புண்கள் :

மேலை மருந்துகள் அதிகம் எடுத்து, பசியின்மை மற்றும் வயிற்றுப் புண்களால் சிரமப்படுவோர், தினமும் உணவு சாப்பிட்டபின், இரு வேளை, திரிபலாவை தேனில் கலந்தோ அல்லது வெறுமனோ, சாப்பிட்டு தண்ணீர் பருகி வர, விரைவில் பாதிப்புகள் நீங்கும்.

 

சரும வியாதிகள் :

அனைத்து பாதிப்புகளுக்கும் திரிபலாவை சூரணம் எனும் பொடியாகவே, தினமும் சாப்பிட்டு வரலாம். இரவில் திரிபலா பொடியை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் பருகி வர, மலச் சிக்கல் நீங்கும், நரையை போக்கும், சரும வியாதிகளை விலக்கும்.

 

பல்வலி: திரிபலாவை வெந்நீரில் கலந்து தினமும் வாய் கொப்புளித்து வர, பற்களில் ஏற்படும் பல் வலி, பல் சொத்தை போன்ற பாதிப்புகள், வாய் துர்நாற்றம் முதலியவை நீங்கும். திரிபலா நீரில் கழுவி வர, உடலில் உள்ள ஆறாத புண்களும் விரைவில் ஆறிவிடும்.