Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நொடிப் பொழுதில் குதிகால் வலி குணமாக வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்!!

#image_title

நொடிப் பொழுதில் குதிகால் வலி குணமாக வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்!!

நம்மில் நிறைய பேருக்கு குதிகால் வலி என்பது இருக்கும். இந்த குதிகால் வலியால் நடக்ககூட முடியாது. இந்த பதிவில் குதிகால் வலியை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

 

நம்மில் பல பேருக்கு குதிகால் வலி என்பது இருக்கும். இந்த குதிகால் வலி எவ்வாறு ஏற்படுகிறது என்றால் காலில் யூரிக் ஆசிட் அதிக அளவு இருப்பதால் மட்டும் தான் குதிகால் வலி தேன்றுகிறது. இதனால் காலையில் எழுந்தால் ஒழுங்காக நடக்ககூட முடியாமல் தாங்கி தாங்கி நடப்பார்கள். இந்த குதிகால் வலியை குணப்படுத்த எளிமையான வீட்டு வைத்தியத்தை தெரிந்து கொள்வோம்.

 

இதை செய்ய தேவையான பொருட்கள்…

 

* அரிசி கழுவிய தண்ணீர் (ஒரு நாள் முன்பு எடுத்து வைக்கவும்)

* சுக்கு

* ஓமம்

* எலுமிச்சம்பழம்

*கல்லுப்பு

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

இதை செய்ய ஒரு நாள் முன்பே அரிசி கழுவிய தண்ணீரை எடுத்து வைக்க வேண்டும். மறுநாள் இந்த அரிசி கழுவிய தண்ணீரை எடுத்து பார்க்கும் பொழுது இது நன்றாக புளித்து இருக்கும். இந்த தண்ணீரில் சுக்கு ஒரு ஸ்பூன், ஓமம் ஒரு ஸ்பூன் போட்டு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றை சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு இதில் சேர்த்துக் கொள்ளவும்.

 

பிறகு இதை சூடாக்கி இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒரு 20 நிமிடம் உங்கள் கால்களை இதில் வைத்து விட்டு பிறகு தூங்கச் செல்லுங்கள். மறுநாள் காலையில் குதிகால் வலி இருக்காது. இதை தொடர்ந்து செய்வதன் மூலம் யூரிக் ஆசிட் அளவு குறைந்து குதிகால்நமக்கு ஏற்படாது.

Exit mobile version