Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒரு வேர் போதும்!! வழுக்கை தலையிலும் கொத்து கொத்தாக முடி வளரும் சூப்பர் டிப்ஸ்!!

இந்த ஒரு வேர் போதும்!! வழுக்கை தலையிலும் கொத்து கொத்தாக முடி வளரும் சூப்பர் டிப்ஸ்!!

வழுக்கை என்பது தலையில் இருந்து அல்லது உடம்பிலிருந்து முடி கொட்டுவதை குறிக்கும். தலை வழுக்கை பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ தலையிலிருந்து முடி உதிர்வை குறிக்கும்.  பொதுவாக இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நிலையில் வழுக்கைக்கு தேவையான அனைத்து டெக்னாலஜிகளும் இந்தியாவில் வளர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் இது மாதிரி செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையில் கொண்டு போய் விட்டு விடலாம்.   மேலும் வழுக்கை பிரச்சனை பரம்பரை பரம்பரையாக வரக்கூடிய பிரச்சினையாகவும் கூறப்படுகிறது. இதனால்   வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான முறையில் செய்த எண்ணை தடவி வருவதால் வழுக்கை தலையிலும் முடி வளரும்.

தேவைப்படும் பொருட்கள்

கீழாநெல்லி வேர்

தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை

கருஞ்சீரகம்

நெல்லிக்கனி

சின்ன வெங்காயம்

செய்முறை

முதலில் கீழாநெல்லி வேர் சுத்தம் செய்து சிறிய துண்டாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.  அதன் பிறகு தேங்காய் எண்ணெயை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதில் கீழாநெல்லி வேர் கருவேப்பிலை கருஞ்சீரகம் நெல்லிக்காய்  சேர்த்து நன்றாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த எண்ணையை  தலையில் தடவி வந்தால் தலையில் முடி வளரும்.

இதனை தினமும் இரண்டு முறை தடவி வந்தால் இரண்டு வாரத்தில் வழுக்கை தலையிலும் முடி முளைக்கும். இதனுடன் சின்ன வெங்காய ஜூஸை அரைத்து எடுத்துக்கொண்டு அதனையும் தலையில் தேய்த்து வரலாம். இதனை செய்வதால் வழுக்கை தலையிலும் கொத்து கொத்தாக முடி வளரும்.

Exit mobile version