Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி மருந்து மாத்திரை தேவை இல்லை தைராய்டு பிரச்சனைக்கு இந்த ஒரு சூப் போதும்!!

#image_title

இனி மருந்து மாத்திரை தேவை இல்லை தைராய்டு பிரச்சனைக்கு இந்த ஒரு சூப் போதும்!!

தைராய்டு என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தைராய்டு என்பது நம்முடைய கழுத்தில் இருக்கும் சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான ஒரு சுரப்பி. இந்த சுரப்பி வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவி செய்கின்றது. இந்த சுரப்பி ஒரு சிறிய வடிவிலான உறுப்பு என்றாலும் நம் உடல் செயல்பாடுகளில் பல முக்கிய பங்கு வகிக்கின்றது.

தைராய்டு நோயால் ஏற்படும் பிரச்சனைகள்:

* தைராய்டு நோயால் உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றது.

* தைராய்டு நோய் காரணமாக உடலின் வளர்சிதை மாற்றங்களும் பாதிக்கப்படுகின்றது.

* தைராய்டு ஹார்மோன்கள் சமநிலையின்றி இருக்கும்போது பெண்களுக்கு சோர்வு, ஒழுங்கற்ற மாதவிடாய், பதட்டம், தூக்கமின்மை ஏற்படுகின்றது.

முறையான உணவு, முறையான உடற்பயிற்சி, முறையான வாழ்க்கை முறை மூலம் தைராய்டு நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் இந்த குறிப்பிட வகையான சூப்பை அதாவது தைராய்டு சூப்பை சாப்பிடுவதன் மூலம் தைராய்டு நோயை கட்டுப்படுத்தலாம்.

தைராய்டு சூப் செய்ய தேவையான பொருட்கள்:

* கேரட்

* பாசி பருப்பு

* கருப்பு மிளகு

* உப்பு

* நெய்

தைராய்டு சூப் செய்முறை:

முதலில் பருப்பை ஊறவைக்க வேண்டும். கேரட்டை நறுக்கிய.பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய கேரட்டை போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு ஊற வைத்த பருப்பை அதில் இட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சுவைக்கு தகுந்த மாதிரி கொதிக்க வைக்கவும். ஒரு 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து நன்றாக ஆறிய பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

தேவைப்பட்டால் தண்ணீர் சேத்துக் கொள்ளலாம். அரைத்து முடித்தவுடன் ஒரு பாத்திரத்தில் சூப்பை ஊற்றி அதில் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம்.

தைராய்டு சூப் செய்து குடிப்பதால் தைராய்டு நோய் மட்டுமில்லாமல் உடல் பருமனும் வேகமாக குறையும்.

Exit mobile version