Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

7 நாட்களில் உங்கள் மூட்டு வலி குணமாக இதோ இந்த ஒரு ஸ்பூன் பொடி போதும்!!

#image_title

7 நாட்களில் உங்கள் மூட்டு வலி குணமாக இதோ இந்த ஒரு ஸ்பூன் பொடி போதும்!!

வயதானவர்களுக்கு உள்ள வலிகளில் தீராத வலி என்றால் அது மூட்டுவலி ஒன்றுதான். இந்த மூட்டு வலியை குணப்படுத்த வயதானவர்கள் அனைவரும் பலவிதமான மருந்துகளையும் சிகிச்சைகளையும் எடுத்திருப்போம். ஆனால் ஒன்றும் பலன் தந்திருக்காது. இந்த பதிவில் வயாதானவர்களுக்கு மட்டுமல்ல இளம் வயதில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலியையும் எவ்வாறு குணப்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

இந்த மூட்டு வலியை ஒரே வாரத்தில் குணப்படுத்தலாம். அவ்வாறு குணப்படுத்த நாம் அமுக்கிரா என்ற பொடியை பயன்படுத்தி இந்த மூட்டு வலியை குணப்படுத்தப் போகிறோம்.

 

தேவையான பொருள்கள்…

 

* சீமை அமுக்கிரா

* பரங்கிப்பட்டை

* நன்னாரி

* சிற்றரத்தை

 

இதை தயார் செய்யும் முறை…

 

முதலில் அமுக்கிரா எடுத்துக் கொள்ள வேண்டும். அமுக்கிரா எடுத்துக் கொள்ளும் அளவில் இருந்து பாதி அளவு பரங்கிப் பட்டை எடுத்துக் கொள்ளவும். பரங்கிப்பட்டை எடுக்கும் அளவில் இருந்து பாதி அளவிற்கு நன்னாரியை எடுத்துக் கொள்ளவும். நன்னாரி எடுத்துக் கொள்ளும் அளவிலிருந்து பாதி அளவு சிற்றரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு நான்கையும் சேர்த்து அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்த பொடியை நாம் பாலில் கலந்து குடிக்கலாம். ஒரு டம்ளர் அளவு காய்ச்சிய பாலில் இரண்டு ஸ்பூன் பொடியை கலந்து குடிக்கலாம். இதை சாப்பிடுவதற்கு முன்பும் சரி சாப்பிட்ட பின்பும் சரி இதை குடிக்கலாம். ஒரு நாளுக்கு இரண்டு முறை இதை குடிக்க வேண்டும்.

 

அவ்வாறு ஒரு நாளுக்கு இரண்டு முறை இதை குடிக்கும் பொழுது மூட்டு வலி குணமாகும். அமுக்கிரா, பரங்கிப் பட்டையும் வாதத்தை சரி செய்யக் கூடியது. நன்னாரி பித்தத்தை சரி செய்யக் கூடியது. சிற்றரத்தை கபத்தை சரி செய்யக் கூடியது எனவே இந்த நான்கையும் சேர்த்து பொடியாக்கி குடிக்கும் பொழுது நம் உடலில் வாதம், பித்தம், கபம் தொடர்பான பிரச்சனையும் சரியாகும்.

Exit mobile version