இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..!
நம்மில் பலருக்கு டீ, காபி என்றால் உயிர்… காலையில் எழுந்த உடன் டீ குடிக்கும் பழக்கம் நம்மிடம் தொடர்ந்து வருகிறது…
டீ குடிப்பதினால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும்… அதில் தீமைகள் தான் அதிகளவில் இருக்கின்றது. டீ குடிக்க வேண்டும்… அதுவும் உடலுக்கு நன்மைகளை மட்டும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் லெமன் டீ குடிப்பது நல்லது.
லெமன் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது… நோய் பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.
இதில் அதிகளவு வைட்டமின் சி சத்து நிறைந்து இருக்கிறது. இந்த லெமனில் டீ போட்டு குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது… சளி, இருமலை போக்குகிறது.
உடலில் படிந்து கிடக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற உதவுகிறது. எலும்பு வலிமை பெற தினமும் லெமன் டீ குடித்து வாருங்கள்.
செரிமானம், மலச்சிக்கல் போன்ற வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ள உதவுகிறது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை சிறுநீர் மற்றும் மலம் வழியாக வெளியேற்ற உதவுகிறது.