Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒரு பொருள் போதும்! உங்கள் BP யை கட்டுக்குள் கொண்டு வரலாம்! 

இந்த ஒரு பொருள் போதும்! உங்கள் BP யை கட்டுக்குள் கொண்டு வரலாம்!  

Bp  எனப்படும் இரத்த அழுத்தமானது 90 முதல் 140 வரை இருக்கலாம். அதற்கு மேல் அதிகமானால் மருத்துவரை அணுக வேண்டும்.

ரத்த அழுத்தம் அதிகமானால் தலை சுற்றல், வாந்தி, மயக்கம், போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இத்தகைய இரத்த அழுத்தத்தை குறைக்கும் எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

இதற்கு நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் பூண்டு. பூண்டில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வாயு தொல்லைக்கு மிக முக்கியமான அருமருந்து பூண்டு. வாயு தொல்லையினால் கூட சிலருக்கு நெஞ்சு குத்து, மூச்சு குத்து ஏற்பட்டு ரத்த அழுத்தமானது அதிகரிக்கலாம்.

ஐந்தாறு பல் பூண்டினை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து நாம் சேர்க்க வேண்டிய பொருள் சீரகம். சீரகம் நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருள். இதை பிபியை குறைக்கவும் பயன்படுகிறது.

ஒரு இஞ்சி பூண்டு இடிக்கின்ற கல்லில் சீரகம் மற்றும் பூண்டை போட்டு நன்றாக பேஸ்ட் பதத்திற்கு இடித்துக் கொள்ளவும். இந்த கலவையை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து சுவைக்கு நாட்டு சர்க்கரை  சேர்த்துக் கொண்டு பருகலாம். சர்க்கரை இல்லாமலும் பருகலாம். இதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர இயலும். அதிக வியர்வை தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் ரத்த அழுத்தமானது சற்று அதிகரித்துள்ளது என்று அர்த்தம். அப்போது வீட்டில் இருக்கும் இந்த எளிய பூண்டு சீரக வைத்திய முறையை பயன்படுத்தினால் Bp யானது சரியான அளவில் இருக்கும்.

Exit mobile version