கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பருவம் வேறு மாதிரி இருந்தது.தற்பொழுது உள்ள குழந்தைகளின் வாழ்க்கை முற்றிலும் வேறுமாதிரி ஆகிவிட்டது.நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுது பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு வந்ததும்படிப்பு,விளையாட்டு போன்ற விஷயங்களில் ஈடுபட்ட பிறகு நிம்மதியான தூக்கத்தை அனுபவித்தோம்.ஆனால் தற்பொழுது உள்ள குழந்தைகளுக்கு இரவு தூக்கம் முற்றிலும் பாதிப்படைந்துவிட்டது.
ஸ்மார்ட் போன்,டிவி போன்றவற்றில் நேரத்தை செலவிடுவதால் குழந்தைகள் உரிய நேரத்தில் உறங்காமல் உடல் சோர்வு,மனசோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.இதற்கு காரணம் தூக்கமின்மை பிரச்சனை தான்.தூங்கும் நேரத்தில் கைகளில் ஸ்மார்ட் போன் வைத்துக் கொண்டிருந்தால் தூக்கத்தை தொலைக்க தான் நேரிடும்.
இரவில் தூங்கவில்லை என்றால் காலையில் பள்ளி செல்லும் நேரத்தில் புத்துணர்வு இன்றி சோம்பேறி போன்று இருப்பார்கள்.இதனால் படிப்பின் மீதான நாட்டம் முற்றிலும் குறைந்துவிடும்.இதனால் பயம் படபடப்பு போன்ற விஷயங்கள் அவர்களை தொற்றிக் கொள்ளும்.
முன்பெல்லாம் பெரியவர்களுக்கு தான் தூக்கமின்மை பிரச்சனை அதிகம் இருந்தது.ஆனால் தற்பொழுது குழந்தைகள் பலர் தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.\
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்:
1)உடல் சோர்வு
2)மனசோர்வு
3)உடல் வலி
4)மன அழுத்தம்
5)உடல் நலக் கோளாறு
குழந்தைகளின் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய வழிகள்:
**ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பழக்கத்தை குழந்தைளிடம் இருந்து குறைக்க வேண்டும்.அதற்கு பதில் கதை சொல்லுதல்,எழுதுதல் போன்ற சில பயிற்சிகள் கொடுக்கலாம்.இதனால் அவர்களின் தூக்க நிலை நன்றாக இருக்கும்.
**பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கையில் ஸ்மார்ட் போன் கொடுக்காமல் அவர்களை சிறிது நேரம் விளையாட வையுங்கள்.இப்படி செய்தால் அவர்கள் உடல் சோர்வடைந்து நேரத்தில் தூங்கிவிடுவார்கள்.
**அதிகாலை நேரத்தில் ஸ்மார்ட்,டிவி போன்றவற்றை குழந்தைகள் பார்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.காலை நேரத்தில் டிவி ஆன் செய்யும் பழக்கத்தை பெற்றோர் ஸ்டாப் செய்ய வேண்டும்.
**குழந்தைகளை அதிகாலை நேரத்தில் எழ வைப்பது யோகா,உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய வைப்பது போன்ற விஷயங்கள் மூலம் அவர்களின் மன நிலையை மேம்படுத்தலாம்.இது அவர்களின் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.