Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செரிமான சிக்கலை தீர்க்கும் இந்த ஒரு கிழங்கை.. வேக வைத்தல் அல்லது பொடித்தல் முறையில் பயன்படுத்தலாம்!!

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடித்தால் மட்டும் செரிமான மண்டலம் சீராக செயல்படும்.ஆனால் இன்று நாம் நார்ச்சத்து மிகவும் குறைந்து காணப்படும் உணவுகளையே அதிகம் உண்கின்றோம்.இதனால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,குடல் அலர்ஜி போன்ற பல பாதிப்புகள் உண்டாகிறது.

எனவே செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பனங்கிழங்கை காய வைத்து பொடித்து உட்கொண்டு வரலாம்.இதில் ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கிழங்கை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும்.அதேபோல் உடல் ஆரோக்கியம் மேம்பட பனங்கிழங்கை தொடர்ந்து உட்கொண்டு வரலாம்.

1)பனங்கிழங்கு – இரண்டு
2)தேன் – சிறிதளவு
3)பால் அல்லது தண்ணீர் – ஒரு கிளாஸ்

முதலில் இரண்டு பனங்கிழங்கை மண் மற்றும் நார் இன்றி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு கால் பங்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவிட வேண்டும்.

பனங்கிழங்கு நன்கு வெந்து வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதை நன்றாக ஆறவிட வேண்டும்.

பிறகு பனங்கிழங்கின் மீதுள்ள நாரை நீக்கிவிட்டு அதன் சதைபற்றை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான மணடலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

அதேபோல் வேக வைத்த பனங்கிழங்கின் நாரை மட்டும் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் போட்டு நன்றாக உலர்த்திக் கொள்ள வேண்டும்.

இந்த பனங்கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு ஜல்லடை கொண்டு சலித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

பால் ஒரு கொதி வந்த பிறகு அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

  1. பின்னர் இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து பருக வேண்டும்.இந்த பனங்கிழங்கு பால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Exit mobile version