Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அறங்காவலர்கள் நியமனம் தேர்வு விண்ணப்பத்தில் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

This question must be included in the application form for the Charities Appointment Examination! The order issued by the High Court!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவாலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்து கேள்வி இடம் பெறவில்லை என நீதிபதிகள் அறநிலைத்துறைக்கு கேள்வி எழுப்பினார்கள்.

அந்த கேள்விக்கு அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் பதில் கூறுகையில் கடந்த விசாரணையின் போது தெய்வ பக்தி கொண்ட அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது என அதனை ஞாபகப்படுத்தினார். அதன் காரணமாக அந்த கேள்வியை இடம்பெற செய்யவில்லை எனவும் கூறினார்.

அந்த பதிலை குறிப்பிட்ட நீதிபதிகள் தெய்வ பக்தி  இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்து கேள்வியை சேர்க்க வேண்டும் என கூறினார்கள். மேலும் அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட அளவில் ஆன குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணையை வரும் ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Exit mobile version