Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே பொருள் மூட்டு வலியை முற்றிலுமாக நிரந்தரமாக குணமாக்கிவிடும்!

ஒரே பொருள் மூட்டு வலியை முற்றிலுமாக நிரந்தரமாக குணமாக்கிவிடும்!

மூட்டுகளில் ஏற்படும் வலியானது மிகுந்த கஷ்டத்தை அளிக்கும். நம்மால் உட்கார்ந்து எழுந்து நடக்க முடியாத அளவிற்கு மூட்டுகளில் பயங்கரமான வலி இருக்கும். இந்த மூட்டு வலிக்கு அற்புதமான வைத்தியத்தை நாம் இப்பொழுது பார்க்க போகின்றோம். இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் வேகமாக தங்களுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்று விடுகின்றனர். மூட்டு தேய்மானம் அடைவதாலும் அதேபோல் அதிக உழைப்பின்மை காரணமாகவும் மூட்டு வலிகள் ஏற்படுகின்றன. இதற்கு ஒரே ஒரு பொருள்தான் அற்புதமான தீர்வாக அமைய போகிறது.

அதற்குத் தேவையான பொருள் ஒன்றே ஒன்றுதான் அது வேப்ப எண்ணெய்.

1. முதலில் ஒரு பௌலை எடுத்துக் கொள்ளவும்.

2. அது மூன்று ஸ்பூன் அளவிற்கு வேப்ப எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும்.

3. இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

4. தண்ணீர் கொதித்த பின் அடுப்பை அணைத்துவிட்டு அந்தத் தண்ணீரின் மீது பௌலில் உள்ள வேப்ப எண்ணையை வைக்கவும்.

5. எண்ணெய்  மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.

6. இப்பொழுது இந்த எண்ணையை எடுத்து எங்கு வலி இருக்கிறதோ அங்கு மூட்டுகளில் தேய்த்து எவ்வளவு தேய்த்து விட முடியுமோ அவ்வளவு தேய்த்து விடலாம்.

7. இது நீங்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்து வர மூட்டுவலி கட்டாயமாக உங்களுக்கு குறைந்திருக்கும்.

8. அதிக நாட்களாக மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் 30 நாட்கள் வரை தடவி வரலாம்.

இந்த இயற்கையான முறையைப் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

Exit mobile version