எங்களை பழி வாங்குவதற்கு திமுக நடத்தப்படும் சதிதான் இந்த ரைடு!! எஸ்.பி வேலுமணி க்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ!
அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்தான் எஸ்.பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.அந்த வகையில் அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ் பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் புகார் அளித்தார்.அதனையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சேர்ந்த ரகுநாத் என்பவரும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.அந்த வகையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிகாலை முதலே எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்த தொடங்கினர்.
இந்த சோதனையானது எஸ்.பி வேலுமணி வீட்டில் மட்டுமல்லாமல் அவருக்கு நெருக்கமான 52 இடங்களிலும் நடந்து வருகிறது.இவர் வீட்டில் சோதனை ஆரம்பித்த ஓர் சில நேரங்களிலேயே சட்டமன்ற உறுப்பினர்கள்,தொண்டர்கள் என அவர்களின் வீட்டின் முன் குவிய தொடங்கினர்.அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த பல்வேறு திட்டப் பணிகளில் எஸ்.பி வேலுமணி முறைகேடு செய்துள்ளதாக இந்த சோதனை மூலம் தெரிவித்தனர்.இந்த முறைகேடுகள் அடிப்படையில் எஸ்.பி வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த 17 பேர் மூலமாக மேலும் 100க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர்.மேலும் வேலுமணியிடம் அண்ட் கோ சமீபத்தில் வாங்கிய சொத்து விவரங்களை பற்றி கேள்விகள் கேட்டு வருகின்றனர். இந்த சோதனைகளுக்கு இடையே எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.அவர் கூறியது இந்த ரைடு ஆனது திமுக எங்களை பழிவாங்குவதற்கு செய்த சதி.தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் எங்களை சோர்வடைய வைக்கவே இந்த சோதனையை நடத்துகின்றனர் என்றார்.ஆனால் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எங்களை சோர்வடைய வைக்காது என்றும் கூறினார்.
இந்த ரைடு மூலம் கோவை மாவட்டத்தில் எங்களது செயல் அதிக அளவு வலுப்பெறும் என்றார்.மேலும் அவர் கூறியது, உங்கள் சோதனையால் அனைத்து எம்எல்ஏ களும் ஒரே நேரத்தில் சந்திக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.திமுகவும் அதன் அதிகாரத்தை பயன்படுத்தி தற்போது சோதனையை நடத்துகின்றனர்.இந்த போக்கை கைவிட வில்லை எனில் திமுக பெரிதளவு பின்னடைவை சந்திக்கும் என்றார்.திமுக தற்பொழுது கொடுத்த 506 வாக்குறுதிகளில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே நிறைவேற்றியுள்ளனர்.மீதம் உள்ளது எதுவும் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.அதுமட்டுமின்றி வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.அதில் எந்த வித தகவலும் சரியானதாக இல்லை.அது அவர்களுக்கு சிவப்பு அறிக்கையின் எச்சரிக்கையாக மாறிவிட்டது என்று கூறினார்.மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இறுதியில் கூறினார்.