அடிக்கடி ஏற்படும் அசிடிட்டியை 5 நிமிடத்தில் சரி செய்யும் வித்தை இந்த விதையில் உள்ளது!!
தவறான உணவு பழக்கங்களால் மார்பு பகுதிக்கு கீழ் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படும்.இதை தான் அசிடிட்டி அதாவது நெஞ்செரிச்சல் என்று சொல்கின்றோம்.வயிற்றுப் பகுதியில் எரிச்சல்,அடிக்கடி புளித்த ஏப்பம் வெளியேறுதல் ஆகியவை அசிடிட்டிக்கான அறிகுறிகள் ஆகும்.
உணவு எடுத்துக் கொள்வதில்லை தாமதம் ஏற்பட்டால் அசிடிட்டி உருவாகும்.வயிறு காலியாக இருக்கும் பொழுது குடலில் உள்ள அமிலங்கள் அதிகளவு நொதிக்க தொடங்குகிறது.இதனால் அல்சர் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.வறுத்த,பொரித்த உணவுகள்,குளிர் பானங்களை சாப்பிட கூடாது.அதேபோல் சிட்ரஸ் பழங்களை குறைவான அளவிலேயே சாப்பிட வேண்டும்.
காலையில் கிராம்பு ஊறவைத்த நீரை குடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து ஓரளவு மீள முடியும்.மூன்றுவேளை உணவுகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.குளிர்ச்சி நிறைந்த துளசி இலையை அரைத்து சாறு எடுத்து அருந்தலாம்.
வெந்தய விதையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி முழுமையாக குணாகும்.தயிர் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்றாலும் அதை குறைவாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெறும் வயிற்றில் மோர்,இளநீர் அருந்தலாம்.நீரில் ஊறவைத்த சாதத்தை உப்பு சேர்க்காமல் அருந்தலாம்.கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை மட்டும் எடுத்து சாப்பிடலாம்.இவை அனைத்தும் அசிடிட்டி பிரச்சனையை போக்க கூடிய வழிகள் ஆகும்.