Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை! தமிழக அரசின் புதிய திட்டம்!

This is a working day for government employees! Sudden announcement!

This is a working day for government employees! Sudden announcement!

இவர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை! தமிழக அரசின் புதிய திட்டம்!

கொரோனா தொற்றமானது ஆண்டுதோறும் உருமாறி பரவி வருகிறது. இந்நிலையில் இந்த புது வருடம் தொற்றிலிருந்து மக்கள் மீண்டும் சகஜமான வாழ்க்கையை வாழ்வோம் என்று நினைத்து வந்தனர்.ஆனால் மக்கள் கண்ட கனவுகளெல்லாம் புது வருடம் பிறந்து ஐந்து நாட்களிலேயே சுக்குநூறாக உடைந்து போனது. கொரனோ தொற்றானது ஓமைக்ரானாக உருமாற்றம் அடைந்து அனைத்து நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நமது இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. சென்ற முறை கொரோனா தொற்றால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகள் இன்றியும் பெரும் அளவு சிரமப்பட்டனர். இம்முறை அதனை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா சிகிச்சை அளிக்கும் முகாம்களை புதிதாக தொடங்கியுள்ளனர். அதேபோல் ஆக்ஸிஜன் இன்றியும் மக்கள் தவித்து ஆனால் இம்முறை அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் தமிழக அரசு செய்து வைத்துள்ளது.நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் தொற்று பாதிக்கப்பட்டவரை அழைத்து செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. அதனை தடுக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட வரை அழைத்துச் செல்வதற்கென்றே சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். இன்று சென்னையில் மு க ஸ்டாலின் அவர்கள் நாற்பத்தி இரண்டு சிறப்பு ஆம்புலன்ஸ்களைத் மு க ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இன்று சிறப்பு ஆம்புலன்ஸ் ஆனது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும்.

Exit mobile version