Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பாடகரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்! எலான் மஸ்க் அதிரடி!

This singer's Twitter account is disabled! Elon Musk Action!

This singer's Twitter account is disabled! Elon Musk Action!

இந்த பாடகரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்! எலான் மஸ்க் அதிரடி!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க்.இவர் அண்மையில் தான் டுவிட்டர் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கினார்.அதன் பிறகு இவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.அந்த வகையில் பிரபலங்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள் அவர்களின் டுவிட்டர் கணக்குகளை அதிகாரபூர்வ கணக்குகளாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக ப்ளூ டிக் முறையை பின்பற்றி வந்தனர்.

இந்த ப்ளூ டிக் கணக்குகள் பெறவேண்டுமென்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தப்படும் கட்டணத்தை எலான் மஸ்க் தற்போது உயர்த்தினார்.மேலும் ப்ளூ டிக் கணக்குகளை பயன்படுத்தி  சிலர் போலி தகவல்களை பரப்பி வருகின்றனர்  அதனால் தற்காலிகமாக ப்ளூ டிக் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது ப்ளூ  கலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன் மூலம் போலி கணக்குகள் மற்றும் போலி தகவல்களை பரப்புபவர்கள் எளிதில் கண்டறியப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் பிரபல ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட்.இவர் பலமுறை கிராமி விருதுகளை வென்றுள்ளார்.மேலும் இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அதனால் அவருடைய டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கு எலான் மஸ்க் கன்யே வெஸ்ட் அவருடைய தனிப்பட்ட உரையாடல்களை டுவிட்டரில் பதிவு செய்து வன்முறையை தூண்டும் வகையில் இருக்கின்றது அதனால் தான் அவருடைய கணக்கு முடக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version