Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அந்நிய நாட்டு மரமான சீமைக் கருவேல மரத்தை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பை விதித்துள்ளது.

அந்நிய நாட்டு மரமான சீமை கருவேல மரம் தமிழகத்தில் உள்ள ஏரிகளில் அதிக அளவில் படர்ந்து உள்ளன.இதனால் பல ஏரிகள் தண்ணீர் இன்றி வறட்சியாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில் அரசு சார்பில் ஆங்காங்கே சீமைக் கருவேல மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலும் மரத்தை முழுவதுமாக அகற்ற கோரியுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 4.90 லட்சம் ஏக்கர் பரப்பு நீர்நிலைகளுக்கு அருகே சீமைக் கருவேல மரங்கள் உள்ளதாகவும்,அதில் 1.75 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மரங்கள் அகற்றப்பட்டதாகவும் நீர்வளத்துறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல்செய்தது.இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள்,மீதம் இருக்கும் சீமை கருவேலம் மரங்களை உடனடியாக அகற்ற அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்த கோரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version