Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த டிவிஸ்ட எதிர்பாக்கலையே.. ரஜினியின் வில்லனாகும் முன்னாள் காதலியின் கணவர்!!

This twist is opposite.. Rajini's villain is the ex-girlfriend's husband!!

This twist is opposite.. Rajini's villain is the ex-girlfriend's husband!!

இந்த டிவிஸ்ட எதிர்பாக்கலையே.. ரஜினியின் வில்லனாகும் முன்னாள் காதலியின் கணவர்!!
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடைசியாக நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும் 600 கோடி ரூபாய் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக மாறியது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய டிஜி ஞானவேல் அவர்கள் இயக்கி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்த திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
அதாவது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வருகிறார். கூலி திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அனிருத் அவர்கள் கூலி திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கூலி திரைப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றது.
அதாவது கூலி திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி அடுத்தடுத்து அப்டேட்டுகள் வருகின்றன. அந்த வகையில் மிஸ்டர் பாரத், பாயும் பலி போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்த நடிகர் சத்யராஜ் அவர்களும் தளபதி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷோபனா அவர்களும் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் நாகர்ஜுனா அவர்கள் கூலி திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் ஹைதராபாத்தால் நடந்து வந்த கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
தற்பொழுது நடிகர் நாகர்ஜுனா அவர்கள் இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா அவர்கள் கூலி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இருப்பினும் கூலி திரைப்படத்தின் நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் உண்மை என்ன என்பது தெரியும்.
Exit mobile version