அரசு ஊழியர்களுக்கு இது கண்டிப்பாக வழங்கப்படும்! அதிரடி காட்டிய தலீபான்கள்!
ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்தது. அந்த போரில் தலிபான்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கனின் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்களின் கையில் போய்விட்டது என்ற செய்தி வெளிவர தொடங்கியதுமே உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கி விட்டன. இதற்கு உலக நாடுகள் பலவும் இந்த செய்தி கேட்டு ஆப்கன்மக்களுக்கு அதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
அதேபோல் தன் நாட்டு மக்களையும் பாதுகாப்பாக அழைத்து வரவும் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் அங்கே ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. தாங்கள் மிகவும் அச்சத்துடன் இருப்பதாக ஆப்கானியர்கள் பேட்டி அளிக்கும் காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. மக்கள் பலரும் விமானநிலையத்திற்கு விட்டால் போதும் என ஓடும் காட்சிகள் நெஞ்சை பதைபதைப்பதாக இருக்கின்றன.
மேலும் அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 7 பேர் வரை உயிரிழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்கள் என்ன செய்ய போகிறோம் என வேதனை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் தலிபான்கள் திடீர் அறிவிப்பு ஒன்றை அறிவித்து உள்ளனர். பொது மன்னிப்பு வழங்கப் படுவதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன், பயமில்லாமலும் தங்களது பணிகளை தொடங்கலாம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.