தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி!

0
181
thoothukudi-mass-scare-investigation-update

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை மூடக் கோரியும் 2018ம் ஆண்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.2018 மே 22ம் தேதி போராட்டக்காரர்களை தமிழக காவல்துறையும் துணைப் பாதுகாப்புப் படையும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.மேலும் மக்கள் மீது வன்முறையை செலுத்தினர்.இந்த சம்பவத்தால் 13 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 102 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதனால் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் ஆலையை மூடி சீல் வைத்தனர்.மேலும் இறந்த 13 நபர்களின் இறப்புக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ அரசின் மீதும் காவல்துறை மீதும் வழக்கு தொடுத்தனர்.

இது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார்.இவரது தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.இதனிடையே நீதிபதி அருணா ஜெகதீசன் சமீபத்தில் தனது இடைக்கால அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்தார்.

இந்த விசாரணை ஆணையம் பல்வேறு தரப்புகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதுவரை 28 கட்டங்கள் விசாரணை நடந்து முடிந்துள்ளது.இந்த விசாரணையின் முக்கிய கட்டமாக இன்று 29து கட்ட விசாரணை நடக்க இருக்கிறது.இந்த விசாரணைக்கு ஹென்றி திபேன் மற்றும் 57 நபர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.இந்த விசாரணையில் முக்கிய வாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.