Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டுகள் வலுவிழந்து நடக்க சிரமப்படுபவர்கள் ஒருமுறை இந்த சூப் வச்சி குடிங்க!!

தற்பொழுது வயதானவர்கள் மட்டுமின்றி இளம் வயதினருக்கும் மூட்டு வலி தொந்தரவை சந்தித்து வருகின்றனர்.கால்சியம் சத்து குறைபாடு,குறைவான நோய் எதிர்ப்பு சக்தி,ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் எலும்பு தேய்மானம்,ஜவ்வு வலிமை இழத்தல் நிகழ்கிறது.

இதனால் முதுமை காலத்தில் சந்திக்க கூடிய பிரச்சனையான மூட்டுவலியை இன்றைய இளம் தலைமுறையினர் சந்தித்து வருகின்றனர்.இந்த மூட்டுவலி பாதிப்பு குணமாக ஆட்டுக்கால் சூப் செய்து சாப்பிடலாம்.

நம் தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறைகளில் ஓன்று இது.வலுவிழந்த மூட்டுகளை வலிமையாக வைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளாட்டுக்கால் – இரண்டு
2)மிளகு – ஒரு தேக்கரண்டி
3)பூண்டு – 10 பல்
4)சின்ன வெங்காயம் – 10
5)தக்காளி – ஒன்று
6)உப்பு – தேவையான அளவு
7)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
8)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
9)மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
10)கறிவேப்பிலை – ஒரு கொத்து
11)மல்லி தழை – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் வெள்ளாட்டுக்காலை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு பூண்டு,மிளகு,தோல் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும்.சிறிது நேரம் கழித்து அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

பிறகு கறிவேப்பிலை,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை வதக்கவும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள ஆட்டுக்காலை போட்டு நன்றாக வதக்கவும்.

அதன் பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கர் மூடி போட்டு நான்கு விசில் விடவும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு விசில் நின்றதும் மூடியை திறந்து ஆட்டுக்கால் சூப்பில் மல்லித் தழை தூவி ஒரு கப்பிற்கு மாற்றி குடிக்கவும்.இந்த ஆட்டுக்கால் சூப்பை தொடர்ந்து பருகி வந்தால் மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.

மூட்டு தேய்மானம்,மூட்டு வலி,மூட்டுகளில் குத்தல் மற்றும் குடைச்சல் போன்ற பாதிப்புகளை உணர்பவர்கள் வாரம் இருமுறை ஆட்டுக்கால் சூப் செய்து குடிக்கலாம்.

Exit mobile version