ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் காசோலை பரிவர்த்தனை செய்பவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் :! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு !!

0
168

காசோலை பரிவர்த்தனையுன் போது ஏற்படும் இன்னல்களை தடுக்கும் வகையில், “காசோலை துண்டிப்பு முறை” என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

காசோலை பரிவர்த்தனையுன் போது ஏற்படும் சிக்கல்களும், பிரச்சினைகளும், தகவல் பரிமாற்றம் தாமதமாகும் போன்ற இன்னல்களினால் பணத்தை இழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில், 50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும் போது, இதுதொடர்பாக தங்களது வங்கிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன் எஸ் எம் எஸ் ,மொபைல் ஆப்/ இன்டர்நெட் பேங்கிங் ,ஏடிஎம் ஆகியவை மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதில் பணத்தை பெறுவோரின் பெயர், தொகை, தேதி, ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இதன் மூலம் யாருக்கு காசோலை தரப்படுகிறது என்றும், அந்த காசோலை உண்மையானதா ? என்பதை குறித்த தகவல்களினால் வங்கி மூலம் உறுதிப்படுத்த இயலும் என்று தெரிவித்துள்ளனர் . இதனால் வாடிக்கையாளர்கள் காலதாமதம் ஏற்படாத வகையில், விரைவில் பணம் பெற இயலும் என்று தெரிவித்தனர்.

ரூபாய் 50 ஆயிரத்திற்கு அதிகமான தொகை உள்ள காசோலைகளுக்கு, இந்த முறை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் காசோலை முறைகேடுகளை தடுக்க இயலும். மேலும் புதிய திட்டத்தை குறித்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்கள் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.