பேங் லாக்கர் வைத்திருப்பவர்கள் இதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும்! ரிசர்வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்!
தற்போதுள்ள சூழ்நிலையில் வீட்டில் பாதுகாப்பாக நகை மற்றும் பணத்தை வைக்க முடியாத நிலை உள்ளது.அதனால் பலரும் வங்கியின் உதவியை தேடுகின்றனர்.வங்கிகளில் பொதுமக்கள் கொடுக்கும் பணம் மற்றும் நகையை பாதுக்காப்பதற்கு லாக்கர் உள்ளது.இந்த லாக்கரில் நம்முடைய வங்கி கணக்கை பயன்படுத்தி பணம் மற்றும் நகைகளை பாதுக்காப்பாக வைத்து கொள்ள முடியும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுடன் வங்கிகள் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களை ஜனவரி ஒன்றாம் தேதிக்குள் புதுபித்திருக்க வேண்டும் என கூறியிருந்தது.
மேலும் லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுடன் வங்கிகள் லாக்கர் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் லாக்கர் ஒப்பந்தங்களை புதுபிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கி லாக்கரில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மதிப்புமிக்க பொருள்கள் வங்கி ஊழியர்களால் மோசடி செய்யபட்டலோ, தொலைந்தாலோ,தீ அல்லது கட்டிடம் இடிந்து விழுந்து லாக்கர் சேதமடைந்தாலோ வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.