உடல் எடையை குறைக்க சம்மணங்கால் உதவும்!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!
நம் முன்னோர்களின் முக்கிய பழக்க வழக்கங்களில் ஒன்று சம்மணம் போட்டு அமர்தல்.இந்த பழக்கம் தற்பொழுது மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.படிக்க,உணவருந்த என்று பல செயல்களுக்கு சம்மணம் போட்ட உங்களில் பலருக்கு அதன் நன்மைகள் பற்றி தெரிய வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தரையில் சம்மணம் போட்டால் கௌரவக் குறைச்சலாக நினைப்பதாலையே அதன் நன்மைகள் தெரியாமல் போய்விடுகிறது.சம்மணம் போட்டு அமரும் பழக்கத்தை தொடர்ந்து வந்தால் உடலில் உள்ள உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
நாம் நெடு நேரம் நிற்பது,ஓடுவது,நடப்பது,இருக்கையில் அமர்வது போன்றவற்றை செய்யும் பொழுது உடலிலுள்ள இரத்த ஓட்டம் மேலிருந்து கீழாக செல்லும்.இதனால் உடலின் மேல்பகுதி மற்றும் இடைப்பட்ட பகுதிக்கு தேவையான இரத்த ஓட்டம் கிடைக்காது.
இதனால் சம்மணம் கால் போட்டு அமரும் பொழுது மற்ற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் செல்வது சீராகும்.அது மட்டுமின்றி சம்மணங்கால் போட்டு சாப்பிட்டால் வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் செல்வது அதிகரிக்கும்.இதனால் செரிமான கோளாறு ஏற்படாமல் இருக்கும்.
சம்மணம் போடும் பழக்கம் இருப்பவர்களுக்கு உடல் எலும்பு வலிமை அதிகரிக்கும்.இந்த பழக்கத்தால் உடல் எடை குறைய அதிக வாய்ப்பிருக்கிறது.தரையில் சம்மணம் போட்டு அமரும் போது மூளை நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்.இதனால் மன அமைதி உண்டாகி நினைவாற்றல் பெருகும்.