DMK: உதயநிதி சனாதனம் ஒழிக்க பட வேண்டுமென கூறியதற்கு ஆந்திர துணை முதல்வர் மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி பல வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டது. இவர் கட்சி சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்று நடத்தினார். மாநாட்டிற்கு உதயநிதி தலைமை வாய்த்து சனாதனத்தை, டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல் போல் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.
இவ்வாறு அவர் பேசியதற்கு பல தரப்பிடமிருந்து கண்டனம் எழுப்பப்பட்டது. மேற்கொண்டு அந்த வழக்குகள் தற்போது வரை முடியாமல் நிலுவையிலும் உள்ளது. இவ்வாறு இருக்கையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உதயநிதியை மறைமுகமாக எச்சரித்து பேசியுள்ளார். அதில், அண்டை மாநிலத்தை சேர்ந்த ஓர் இளம் தலைவர் சனாதனம் என்பது வைரஸ் கிருமி போன்றது அது அழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பேசுபவர்களுக்கு நான் ஒன்று கூறுகிறேன், சனாதனத்தை ஒழிக்க நினைக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அழிந்து போவார்கள். வெங்கடாசலபதியின் பாதத்திலிருந்து கூறுகிறேன் தெரிவித்துள்ளார். இது குறித்து உதயநிதியிடம் கேட்கையில் ஒரே வரியில் வைட் அன்ட் சி என பதிலளித்துள்ளார்.