உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள்.. சர்க்கரையை இப்படி மட்டும் எடுத்துக்காதீங்க!!

0
116
Those who want to lose weight.. Don't take sugar like this!!

நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அறுசுவைகளில் ஒன்று இனிப்பு.அதிலும் வெள்ளை சர்க்கரையானது டீ,காபி,ஜூஸ்,ஸ்மூத்தி,ஸ்வீட் என்று பல உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

இது தவிர இட்லி,தோசை,சாதம் போன்ற அனைத்து உணவுப் பொருட்களிலும் சர்க்கரை இருக்கிறது.வெள்ளை சர்க்கரையில் தேவையற்ற கலோரிகள் அதிகம் நிறைந்திருக்கிறது.இது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து உடல் பருமனை உண்டாக்கிவிடும்.

அது மட்டுமின்றி வெள்ளை சர்க்கரை உடலில் இன்சுலின் அளவை குறைத்து இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.சர்க்கரையில் உள்ள நச்சுக் கழிவுகள் குறைந்த வயதிலேயே உடலில் பாதிப்புகளை ஏற்படுத்த காரணமாக அமைகிறது.

சர்க்கரைக்கு மாற்று சுகர் ப்ரீ எடுத்துக் கொள்ளலாமா? என்பது பலரின் கேள்வி.ஆனால் சுகர் ப்ரீ கூட உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை தான் விளைவிக்கும்.அது மட்டுமின்றி சுகர் ப்ரீயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அது புற்றுநோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.

அன்றாட வாழ்க்கையில் டீ காபியில் தொடங்கி இரவு ஒரு கிளாஸ் பால் குடிக்கும் வரை அனைத்திலும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.ஒருவர் சராசரியாக நாளொன்றுக்கு 40 முதல் 50 கிராம் வரை சர்க்கரை எடுத்துக் கொள்கிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

சர்க்கரைக்கு மாற்று வெல்லம்,தேன்,பனங்கற்கண்டு,பனைவெல்லம் போன்றவை எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்றாலும் அதை அளவாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் உடலுக்கு நஞ்சாக மாறிவிடும்.

வெள்ளை சர்க்கரையை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரித்து நோய் பாதிப்புகளுக்கு வழிவகை செய்துவிடும்.தினமும் குறிப்பிட்ட அளவு சர்க்கரையை மட்டும் எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்காது.அந்தவகையில் ஆண்கள் நாளொன்றுக்கு 37.5 கிராம் மற்றும் பெண்கள் நாளொன்றுக்கு 25 கிராம் சர்க்கரை எடுத்துக் கொண்டால் உடலுக்கு பெரிதளவில் பாதிப்பு ஏற்படாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.