டெங்கு அறிகுறி இருப்பவர்கள் இதை உடனே பருகுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!
கொசுக்களால் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.இந்த காய்ச்சல் பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் ஏற்படுகிறது.தண்ணீர் அதிகம் தேங்கி கிடக்கும் பகுதிகளில் இவை விரைவில் உற்பத்தியாகி விடுகிறது.தற்பொழுது தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க இயற்கை வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.பப்பாளி இலை,வேப்பிலை போன்றவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை வழங்கக்கூடியது.இதை பயன்படுவதால் சளி,விஷக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தப்பித்து விடலாம்.
தேவையான பொருட்கள்:-
*கடுக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
*சுக்குப்பொடி – 1 தேக்கரண்டி
*கோரைக் கிழங்கு – சிறிதளவு
*கறிவேப்பிலை – 1 கொத்து
*இந்துப்பு – 1/2 கிராம்
*தேன் – தேவைக்கேற்ப
செய்முறை:-
* அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
*அவை சூடேறியதும் அதில் கோரைக் கிழங்கு சிறிதளவு,கருவேப்பிலை ஒரு கொத்து,சுக்குப்பொடி,கடுக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.1 கப் தண்ணீர் பாதியாக குறைந்து வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.
*பிறகு அதை ஒரு பவுலில் வடிகட்டி அதில் 1/2 கிராம் இந்துப்பு மற்றும் தேவைக்கேற்ப தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.இந்த பானம் சளி மற்றும் விஷ காய்ச்சலை குணமாக்கும்.
அதேபோல் பாத்திரத்தில் வேப்பிலை ஒரு 1/4 கைப்பிடி அளவு போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு அதை வடிகட்டி குடிக்கவும்.இப்படி செய்தால் விஷ காய்ச்சலை குணமாகும்.
மற்றொரு முறை:-
1)பப்பாளி இலை ஒன்று எடுத்து அதை தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
2)இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து கொள்ளவும்.பிறகு ஒரு டம்ளரில் வடிகட்டி இந்த பப்பாளி இலை சாற்றை பருகவும்.இப்படி செய்தால் டெங்கு பாதிப்பில் இருந்து தப்பித்து விடலாம்.டெங்கு அறிகுறி இருந்தாலும் அவை குணமாகிவிடும்.
அதேபோல் வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து பருகினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.கற்றாழை ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் கலந்து நன்கு அரைத்து அதை ஒரு டம்ளரில் ஊற்றி பெருகினாலும் நல்ல பலன் கிடைக்கும்.இதை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உண்பது மிகவும் அவசியம் ஆகும்.