ஆயிரமாண்டு அதிசயம் தஞ்சை பெருவுடையார் கோவில் சிற்பங்களின் விந்தை தகவல்கள்!!!

0
70
#image_title

ஆயிரமாண்டு அதிசயம் தஞ்சை பெருவுடையார் கோவில் சிற்பங்களின் விந்தை தகவல்கள்!!!

காவிரியின் தென்கரையில் ஐயன் இராசராசரால்  1003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1010 முடிக்கப்பட்டது பெருவுயடையார் கோவில். இக்கோவில்  முழுவதுமே தத்ரூபமான பல சிற்பங்கள் நிறைந்துள்ளது.இதனை ஒய்வு பெற்ற ஆசிரியர் செல்வம் அவர்கள் தஞ்சை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கோவிலின் சிறப்புகளை  எடுத்துரைத்து வருகிறார்.

கோவிலின் நுழைவாயிலில் இரண்டு துவார பாலகர்கள் அமைந்துள்ளனர்.மற்ற  கோயில்களில் இந்த துவார பாலகர்கள் சிறியதாக தான் அமைத்திருக்கும் ஆனால் இக்கோவிலில் துவார பாலகர்கள் அளவில் பெரியதாக உள்ளதன் காரணம் என்னவெனில் நுழைவாயிலில் இருக்கும் துவாரபாலகர்களே இவ்வளவு பெரியவராக இருந்தால் உள்ளிருக்கும் இறைவனான “சிவன்” எவ்வளவு உயர்ந்தவர் என்பதை குறிக்கவே இச்சிலையாகும்.

அதேபோல் தட்சினா மூர்த்தி சிலையின் இருபுறமும் சிவன் இருப்பார் இந்த சிவன் சிலையின் ஒருமுகம் கோரமாக சினத்துடன் காணப்படும்,மற்றொரு சிவன் முகம் அமைதியே உருவாக காட்சியளிக்கும் எனவும் இச்சிலையிலிருந்து தெரியவரும்  செய்தி என்னவெனில் அடியவர்களுக்கு சிவன் மதிபோன்று குளிர் தன்மை கொண்டவர் எனவும்.தீயவர்களுக்கு கதிரவன் போன்று சுட்டெரிக்கும் தன்மை கொண்டவர் என்பதாகும்.

கோவிலின் பின்புறம் ஒரு சிலையிருக்கும். அதில் சிவன் உடல் இரண்டாக பிளப்பது போலிருக்கும் ஆனால் கால்பகுதி ஒன்றாகயிருக்கும் இச்சிலை சொல்லவரும் செய்தி என்னவெனில் ஹரி அதாவது பெருமாள் மற்றும் சிவன் ஆகிய இருவரும் ஒன்று என்ற மத நல்லிணக்க கருத்தை கூறுவது போல் அமைந்திருக்கும்.இவ்வாறு இந்த கோவிலின் ஒவ்வொரு சிலையும் விந்தை தான் என ஆசிரியர் செல்வம் கூறுகிறார். தமிழ் கோவிலான தஞ்சை கோவில் சிற்பங்களின் சிறப்பை எடுத்துரைக்கும் செல்வம் ஐயா அவர்களின் களப்பணி சிறக்கட்டும்.