Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சலுகை விலையில் நூல்கள் விற்பனை !

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்
சலுகை விலையில் நூல்கள் விற்பனை !

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையில் 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கு. சின்னப்பன் கூறியதாவது:

தமிழ்ப்பல்கலைக்கழக நிறுவன நாள் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக நூல்கள் 50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால், செப்டம்பர் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன், 50 சதவீத தள்ளுபடி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார்.

பொதுமக்கள் இச்சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்களை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவித்துள்ளார்.

Exit mobile version