Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருது பாண்டியர் குரு பூஜையில் அச்சுறுத்திய பயணம்! வைரலாகிய வீடியோ!

மருது பாண்டியர் குரு பூஜையில் அச்சுறுத்திய பயணம்! வைரலாகிய வீடியோ!

தற்போது சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் குரு பூஜை அரங்கேறி வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் அந்த குரு பூஜை நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். அதே போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையும் நடைபெறும். அந்த பூஜைக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பலர் வந்து கலந்து கொள்வதும், வழக்கமான ஒன்றுதான்.

தற்போது அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் இந்த விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். அப்படி வருபவர்களில் சில நபர்கள் கருப்பு நிற வண்டியின் மீது அனைத்து பகுதிகளிலும் நின்று கொண்டும், மேற்புறங்களில் படுத்துக்கொண்டும் கார் நிறைய கூட்டமாக வரும் வீடியோ தற்போது பரவி வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து வரும் காரிலும் இதே போன்று நிறைய பேர் கூட்டமாக, ஒரே காரில் பலரும் சுற்றிக் கொண்டு செல்வது போல செல்கின்றனர்.

மருது பாண்டியர் குரு பூஜையின் போது ஆபத்தான வகையில் காரில் சாகசம் செய்த இளைஞர்கள்

ஒரு காரில் குறைந்தது 20 முதல் 30 பேர் வரை சாதாரணமாக பயணம் செய்கின்றனர். பல இடங்களில் நாம் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணியவில்லை என்றோ அல்லது காரில் சென்றால் சீட் பெல்ட் போடவில்லை என்றோ போலீசாரிடம் தண்டனைக்கு தண்டம் கட்டுவது நம்மில் பலருக்கு தெரிந்த ஒன்று தான்.

ஆனால் இவர்களை யாரும் கேட்க ஆள் இல்லை என்பது போல் இவர்கள் செய்த அடாவடி செயல், தற்போது அந்த வீடியோவின் மூலம் வைரலாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. இவ்வளவு  ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொண்டாலும் யாருக்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழவில்லை. பத்திரமாக போய் சேர்ந்தார்கள். இருந்தாலும் அப்படி பயணம் செய்தவர்களை யாரும் எதுவும் கேட்கவில்லை என்ற கேள்வியை அந்த வீடியோவை பார்த்த  பலர் எழுப்பியுள்ளனர்.

Exit mobile version