Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அச்சுறுத்தும் கொரோனா! லாக்டௌன் பற்றி அவசர ஆலோசனைக்கூட்டம்! 

India 1st in Corona attack! Number of victims touching peak!

India 1st in Corona attack! Number of victims touching peak!

அச்சுறுத்தும் கொரோனா! லாக்டௌன் பற்றி அவசர ஆலோசனைக்கூட்டம்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்து தற்போது வரை சிரிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்.ஆனால் மக்கள் கொரோனாவை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.சென்ற ஆண்டை விட தற்போது கொரோனா 2வது அலை உருவாகி அதிக அளவு தொற்றை பரப்பி வருகிறது.அந்தவகையில் ஓர் நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 1,200 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.தற்போது தொற்று பரவலை கட்டுபடுத்த அதிக கட்டுப்பாடுகளை தமிழக அரசு நிறுவியுள்ளது.கூட்டம் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே அனுமதி தருமாறு கூறியுள்ளது.அதுமட்டுமின்றி உழவர்சந்தைகளில் சிறு கடைகளை வைக்க தடை செய்துள்ளது.

அதன்பின் முகக்கவசம் அணியாமல் இருப்பது,சாலைகளில் எச்சில் துப்புவது என சில கட்டுப்பாடுகளை போட்டு அதை மீறுபோருக்கு அபராதம் வித்தித்துள்ளனர்.அதற்கடுத்து அதிகமாக கொரோனா பரவி வருவதால் ஊரடங்கு போடப்படுமா என நிர்மலா சீதாராமனிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.அப்போது அவர் கூறியது,கொரோனா அதிகமாக பரவினாலும் அதற்கு கட்டுப்பாடுகள் போடப்படுமே தவிர ஊரடங்கு போடப்படாது என கூறினார்.

ஆனால் டெல்லியில் அதிக அளவு தொற்று பரவிவருவதால் வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.அதுமட்டுமின்றி அதிக அளவு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றது.அதிக அளவு படுக்கைகளும் நிறுவப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது கோவையில் உள்ள ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.கொரோனா அதிக அளவு பரவி வருவதால் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.இதில் ஊரடங்கு போடப்படும் என பேசி வருகின்றனர்

Exit mobile version