தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள்!!
நாடாளுமன்ற தேர்தலானது ஒரு கட்டமாக நடந்து முடிந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை ஆரம்பித்த நாட்களில் இருந்து அண்ணாமலை மீது ஒரே வழக்காகவே குவிந்த வண்ணமாக தான் உள்ளது.தேர்தல் விதிமுறைகளை உரிதாக கடைப்பிடிக்காமல் பல வழக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக இவர் மீது போடப்பட்டு வந்தது.
தற்பொழுது பொய் தகவல் பரப்புவதற்காக வழக்கு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பக்கிரமணி என்ற கிராமத்தில் கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தான் காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வீண் பழி சுமத்தியதாக தற்பொழுது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலின் போது கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.இதற்கு முக்கிய காரணம் திமுகவிற்கு வாக்களிக்காதது என்று இணையத்தில் பல காரணங்கள் கூறி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.
ஆனால் போலீசாரின் விசாரணையில், வாக்கு சாவடி முன்பு நடந்த மோதலில் தான் கோமதி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.ஆனால் அண்ணாமலை உண்மை நிலை அறியாமல் திமுக மீது வீண் பழி சுமத்தி மக்களிடையே செய்தி பரப்புவதாக திமுக இளைஞர் அணி செயலாளர் புகார் அளித்துள்ளார்.அதுமட்டுமின்றி தொடர்ந்து இவர் மீது இது குறித்து மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.