மூன்று நாட்கள் தொடர் விடுமுறை!!! தமிழகத்தில் சென்னையில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!!

0
108
#image_title

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை!!! தமிழகத்தில் சென்னையில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!!

அடுத்த வாரம் அதாவது செப்டம்பர் 16, 17, 18 ஆகிய மூன்று தினங்களில் தொடர்ந்து விடுமுறை வருவதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 850 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் வார இறுதி நாட்களான சனி(செப்டம்பர்16) மற்றும் ஞாயிறு(செப்டம்பர் 17) உடன் சேர்ந்து திங்கள் கிழமை(செப்டம்பர்18) விடுமுறை தினம் வருகின்றது.

இதையடுத்து பெதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவார்கள். இதை கருத்தில் கொண்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை(செப்டம்பர்15) வழக்கம் போல இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து சென்னையில் இருந்து கூடுதலாக 650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. நாளை மறுநாள் செப்டம்பர் 16ம் தேதி கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

அது மட்டுமில்லாமல் பெங்களூருவில் இருந்து சென்னைக்கும், கோவை, திருச்சி, சேலம், மதுரை போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் சேர்த்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ஆக மொத்தமாக விடுமுறை தினத்தை முன்னிட்டு 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

செப்டம்பர் 18ம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு பயணிகளின் வசதிக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் இதை கண்காணிப்பதற்கு அனைத்து இடங்களிலிலும் தேவைக்கு ஏற்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பயணிகள் அனைவரும் சிறப்பு பேருந்துகளைபயன்படுத்தி கொள்ளுங்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.