மூன்றே நாட்களில் தொடைப் பகுதிகளில் உள்ள கருமையை நீக்க அற்புதமான இயற்கை முறையை தான் பார்க்கப் போகின்றோம். அனைவரும் நினைப்பது உண்டு. தொடை பகுதியில் தானே உள்ளது. அதை ஏன் நீக்க வேண்டும் என்று? தொடை பகுதியில் உள்ள கருமையால் பூஞ்சை தொற்றுக்கள் ஏற்பட்டு அந்தரங்கப் பகுதிகளுக்கு பிரச்சனைகள் வரக்கூடும். அங்கு நோய் தொற்று ஏற்பட்டு மிகவும் அவதிக்குள்ளாகுவது போல் ஆகிவிடும். அதனால்தான் தொடை பகுதிகளில் உள்ள கருமையை நீக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்த முறையானது தொடை பகுதியில் உள்ள கருமை மட்டுமில்லாமல் கைமுட்டி, கால் முட்டிகளில் உள்ள கருமையை நீக்க பயன்படும்.
தேவையான பொருட்கள்:
1. தயிர் இரண்டு ஸ்பூன்
2. கசகசா 2 ஸ்பூன்
3. மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன்.
செய்முறை:
1. முதலில் ஒரு பெளலை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் இரண்டு ஸ்பூன் கசகசாவை சேர்த்துக் கொள்ளவும்.
3. அந்த கசகசாவில் 2 ஸ்பூன் தயிர் ஊற்றி நன்கு ஊற வைக்கவும்.
4. 20 நிமிடம் ஊறிய பின் அந்த கலவையை நன்றாக கலந்து கொள்ளவும். வேண்டுமென்றால் நீங்கள் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளலாம்.
5. இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்!
1. முதலில் கருமையாக உள்ள தொடைப் பகுதிகள் மற்றும் கை கால் முட்டிகளை சோப்பு போட்டு கழுவிக் கொள்ளவும்.
2. இந்த பேஸ்ட் போட்டு நன்றாகத் தேய்த்துவிட்டு 20 நிமிடம் காயவைக்கவும்.
3. 20 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு முறை தேய்த்துவிட்டு சோப்பு பயன்படுத்தாமல் தண்ணீரில் கழுவி விடவும்.
4. இந்த இயற்கை முறையை தொடர்ந்து 3 நாட்களுக்கு செய்து வர தொடை பகுதிகளில் உள்ள கருமைகள் நீங்கி இருக்கும்.