Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்த 3 நாள் பயிற்சி.. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு!

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, இணையவழி மூலம் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்து 3 நாள் பயிற்சியினை வரும் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடத்த உள்ளது.

தற்போது உள்ள சூழலில் அனைத்துமே உலகமயம் ஆகிவிட்டன. இதன் விளைவாக ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த பயிற்சியில் ஏற்றுமதி வர்த்தகத்தின் அடிப்படைகள் மற்றும் அதற்கான அதிக வாய்ப்புள்ள பொருட்கள் / நாடுகள் கண்டறிதல் ஏற்றுமதி தொழில் துவங்க தேவையான அரசு பதிவுகள் செய்யும் முறை GST/IECI RCMC, ஏற்றுமதி விலை நிர்ணயம் & பாதுகாப்பாக பணம் பெறும் முறைகள் மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதி ஆணை செயலாக்கம் மற்றும் ஏற்றுமதிக்கு உதவிடும் அரசு மற்றும் தனியார் சேவை அமைப்புகள், ஏற்றுமதி வளர்ச்சி திட்டங்கள் & ஊக்க தொகைகள் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் / பெண் இருபாலரும் சேரலாம். இப்பயிற்சி நடக்கும் இடம், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் தகவல்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்: 9444556099, 9444557654
முன்பதிவு அவசியம்: www.editn.in

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் | புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600 032

Exit mobile version